பிரியமானவர்களே ,

இந்த மே மாதத்தில் கர்த்தர் நம் வாழ்வில் உள்ள எல்லாவற்றையும் மீண்டும் கட்டியெழுப்புவதாக வாக்குப் பண்ணுகிறார்.

"கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்." (சங்கீதம் 102:15)

என்று பரிசுத்த வேதம் கூறுகிறது. நம் வாழ்வில் எது பாழாக்கப்பட்டிருந்தாலும் அல்லது நொறுக்கப்பட்டிருந்தாலும், அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவன் தமது பெலனை நமக்குக் கொடுத்து, நம்மைத் தமது மகிமையால் நிரப்புவதாக வாக்குப்பண்ணுகிறார்; நாம் மீண்டும் சந்தோஷம், அன்பு மற்றும் சிறந்த வாழ்க்கையைப் பெறுவோம். (ஏசாயா 61:4; 40:31; 58:12)

தேவன் நம் வாழ்வில் மீண்டும் கட்டியெழுப்பப் போகும் காரியங்கள் எவை?

1. நமது நல்ல எதிர்காலம் மீண்டும் கட்டப்படும்: நமது உறவுகள், பொருளாதாரங்கள், ஆரோக்கியம் மற்றும் நற்பெயர் என நம் வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் செதுக்கப்பட்ட கற்களால் மீண்டும் கட்டியெழுப்பும்படி தேவன் நமக்கு கன்மலையாக இருப்பதாக வாக்குப்பண்ணுகிறார். நாம் எதை விதைக்கிறோமோ, அது பலன் கொடுக்கும், நம்முடைய வேலை மற்றும் வாழ்க்கை செழிக்கும். தேவனுடைய ஆசீர்வாதமும் பராமரிப்பும் நம் வாழ்க்கையில் வெளிப்படும், மேலும் நாம் அந்தப் புதிய கல்லுடன் எழுந்து நமது வாழ்க்கையை மீண்டும் கட்டுவோம். (ஆமோஸ் 9:14; ஏசாயா 9:10;  1 கொரிந்தியர் 10:4;  அப்போஸ்தலர் 15:16)

2. பரிசுத்த ஆவியானவர் மூலமாக உங்கள் குடும்பம் மீண்டும் கட்டப்படும்: நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர்மீதும் தமது ஆவியைப் பொழிவார், மேலும் நமது குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைத்து, இயேசுகிறிஸ்துவின் சாட்சியைப் பகிர்ந்துகொள்வார்கள். கர்த்தர் நம்மைத் தமது வாசஸ்தலமாக மாற்றுவார், நம் குடும்பம் கனப்படுத்தப்படும்.(யோவேல் 2:25-27;  வெளிப்படுத்தல் 19:10)

3. நமது நாமம் மீண்டும் கட்டப்படும்: நாம் அவமானத்தின் வழியாகச் சென்ற இடத்தில் அவர் நம்மை ஜெயமுள்ளவர்களாக மாற்றி,  நமக்கு ஒரு புதிய நாமத்தைத் தருவார். புதிய  ஸ்தானம், புதிய அந்தஸ்து, புதிய சாதனைகள் வரும்; மேலும், நாம் மிகுந்த கனத்தோடு தேவனுடைய புதிய மகிமையைப் பெறுவோம். (வெளிப்படுத்தல் 2:17; ஏசாயா 62:2; ஏசாயா 65:15 ; செப்பனியா 3:19)

4. தேவன் தமது மகிமையால் நம் வாழ்வை மீண்டும் கட்டுவார்: இயேசு தமது மகிமையில் வரும்போது, அவர் எல்லா தேசங்களையும், வானங்களையும், சமுத்திரங்களையும், வறண்ட நிலத்தையும் அசைத்து, தம் ஜனங்களை தமது மகிமையால் நிரப்புவார். அப்படியே, நம் வாழ்வில் ‘அசைவு’ நிகழும்போது தேவனுடைய மகிமை இன்னும் பெரிய அளவில் வெளிப்படும். அவர் நமக்குக் கொடுக்கும் மகிமையானது, முந்தின மகிமையைக் காட்டிலும் பெரியதாக இருக்கும் (ஆகாய் 2:6).

‘என் அன்பின் பரலோகப் பிதாவே, உம்முடைய பிள்ளை அனுபவித்த வெட்கத்திற்கும், வேதனைகளுக்கும்,   இழப்புகளுக்கும், அவமானத்திற்கும், நொறுக்குதலுக்கும், அவர்களுடைய வாழ்வில் மீண்டும் உம்முடைய மகிமையை அனுப்பும். அவர்களுடைய வாழ்க்கையை, வேலையை,  குடும்பத்தை, ஊழியத்தை மீண்டும் கட்டியெழுப்பும். இன்னும் பெரிய மகிமை உண்டாவதாக. இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.’

தேவன் உங்களைத் தமது வாசஸ்தலமாக மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறபடியால், மகிமையின் நாட்கள் வருகின்றன.

மிகுந்த அன்பு மற்றும் ஜெபங்களுடன்,
Dr. பால் தினகரன்


தலைமைச் செயல் அதிகாரியின் மேசையிலிருந்து:
ஏப்ரல் மாதத்தில் உங்கள் மூலமாக உண்டான இறைதாக்கம்

உங்கள் ஊக்கமான ஜெபங்களாலும் தாராளமான விதை காணிக்கைகளாலும், கடந்த மாதம் நாங்கள் 2 கோடியே 67 லட்சம் ஜெப விண்ணப்பங்களுக்கு ஊழியம் செய்ததன் மூலம், தேவன் அவர்கள் அனைவருடைய வாழ்க்கையையும் குடும்பங்களையும் கட்டியெழுப்பினார்.

  • ஜெப கோபுரங்களில் 1.5 லட்சம் பார்வையாளர்கள் நேரில் ஜெபித்துக்கொண்டனர்.
  • 24x7 ஜெப உதவி எண்கள் மூலம் 3.9 லட்சம் அழைப்புகளுக்காக பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டன.
  • டிஜிட்டல் தளங்கள் மூலம் 22 லட்சம் மக்கள் தேவனுடைய அன்பை அனுபவித்தனர்.
  • 60,000 கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் பெறப்பட்டு, அவற்றுக்காக ஜெபிக்கப்பட்டு, பதிலளிக்கப்பட்டது.
  • சமூக ஊடகங்கள் மூலம் 2.8 கோடி பார்வையாளர்களின் வாழ்க்கையை எங்களால் தொட முடிந்தது.
  • ஜெபம் மற்றும் தீர்க்கதரிசன வல்லமைப் பயிற்சியில் பயிற்சி பெற்ற 80 மாணவர்கள் இப்போது மக்களுக்கு இறைசேவை செய்வதற்காக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
  • அனைத்து ஜெப கோபுரங்களிலும் 210 வெளிக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, 20,600 மக்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.

ஒவ்வொரு எண்ணும் தொடப்பட்ட ஒரு வாழ்க்கையைக் குறிக்கிறது, இந்த அற்புதத்தில் நீங்களும் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.
கடந்த மாதம் நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களிலும் பரிசுத்த ஆவியானவர் வல்லமையாகச் செயல்பட்டார். இந்தக் கூட்டங்களில், இன்றும் ஜீவிக்கின்ற, ஜனங்களின் வாழ்க்கையில் கிரியைசெய்து, அவர்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஜெயத்தை Dr. பால் தினகரன் தைரியமாக அறிவித்தார்.  Dr.டி.ஜி.எஸ் தினகரன் ஜெப கோபுரத்தில் நடைபெற்ற புனித வெள்ளி ஆராதனையில் தினகரன் குடும்பத்தினர் ஊழியம் செய்தனர். சிலுவையின் வல்லமை மற்றும் நோக்கத்தை பிரதிபலிக்கும்படி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர். அவர்கள் சிலுவையின் ஜெயத்தைப் பெறவும், கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய வாழ்க்கை வாழும்படியாகவும், தினகரன் குடும்பத்தினர் அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக ஜெபம் செய்தார்கள்.  ஏப்ரல் 18 அன்று அசாம், கௌஹாத்தியில் நடைபெற்ற பங்காளர் கூட்டத்தின்போது, வடகிழக்குப் பகுதியிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்காளர்களுக்கு Dr.  பால் தினகரன் மற்றும் சகோதரி இவாஞ்சலின் பால் தினகரன் ஆகியோர்  ஊழியம் செய்தனர். மேலும், திப்பு, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் கௌஹாத்தி போன்ற இடங்களிலிருந்து வந்து, ஊழியத்திற்கு உண்மையுடன் ஆதரவளித்து வரும் நூற்றுக்கணக்கான தன்னார்வ ஜெப வீரர்களை அவர்கள் நேரில் சந்தித்து, வடகிழக்கு மாநில தலைவர்கள் மற்றும் பங்காளர்கள் மாநாட்டின்போது போதகர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்காக ஜெபித்தார்கள்.

Dr. பால் தினகரன், பிப்ரவரி 2014-ல் வழங்கிய தனது அசல் தீர்க்கதரிசனத்தின்படி, உலக நாடுகளுக்கு (மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா) என்ன நடக்கும் என்பதையும், அந்திக்கிறிஸ்துவின் எழுச்சி மற்றும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் பற்றி தன் மூலம் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை நினைவுபடுத்தி, அதை தற்போது மீண்டும் தெரியப்படுத்தினார்.   இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பார்க்க, வாசிக்க  https://bit.ly/IRANWARPROPHECYTA என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

 

மே மாதத்தில் நடைபெற உள்ள ஊழியம்

ஹைதராபாத் ஜெப கோபுரம்: கர்த்தருக்குச் சித்தமானால்,  புதிய ஹைதராபாத் ஜெப கோபுரம் ஜூன் 2026 இறுதிக்குள் பயன்பாட்டிற்குத் தயாராகிவிடும். சிற்றாலயம் மற்றும் ஜெப அரங்கங்களுக்கான தேவைகளைச்  சந்திப்பதற்கு  உங்கள் பங்களிப்பு பெரும் உதவியாக இருக்கும். நீங்கள் ஒரு ஜெப அறை கட்ட  3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கலாம் அல்லது ஒரு ஜெப அறைக்கோ அல்லது ஜெப தியான சிற்றாலயத்திற்கோ இணை ஸ்பான்சராக நிதியுதவி அளிக்கலாம்; ஜெப அறைகள் மற்றும் சிற்றாலயத்திற்கு நிதியுதவி அல்லது இணை நிதியுதவி அளிப்பவர்களின் பெயர்கள், தலைமுறை தலைமுறையாக ஜெபத்துடன் நினைவுகூறப்படும் வகையில் அந்த அறைகளிலும் சிற்றாலயத்திலும் வைக்கப்பபடும். ஜெப அரங்கங்களுக்காக 10,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் பெயர்கள், நன்றியுடன் நினைவுகூறப்படும் வகையில் அந்த மண்டபத்தில் வைக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ளபடி நன்கொடை அளிக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள் அல்லது https://bit.ly/HYDPTBF  என்ற இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்.

ஹைதராபாத் ஜெப கோபுர கட்டட நிதிக்கு நன்கொடை அளிக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

நம்பிக்கையைக் கொண்டுவர எங்களுடன் கைகோருங்கள்

இந்த முன்னேற்றங்கள்  ஒவ்வொன்றும், பிரார்த்தனை உதவி தேடி வருபவர்கள்  ஒருவரும் ஜெப உதவி பெறாமல் போகக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில், பெருகி வரும் தேவைகளைச் சந்திக்கும்  விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேவன் கட்டும் காரியத்தில் நீங்களும் ஒரு அங்கமாக மாறுங்கள்

ஹைதராபாத் ஜெப கோபுர கட்டுமான பணி முன்னேற்றத்தில்   நீங்கள் பின்வரும் வழிகளில் பங்குகொள்ளலாம்:

ஒரு ஜெப அறை அல்லது சிற்றாலயத்திற்கு நிதியுதவி அளித்தல்

  • ரூ. 3 லட்சம் அல்லது அதற்கு மேல்
  • ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேல்
  • ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல்
  • ரூ. 50000/- மற்றும் அதற்கு மேல்

அல்லது பின்வரும் வழிகளில் இணைந்து நிதியுதவி அளித்தல்

  • ரூ. 25000/-
  • ரூ. 10000/-
  • ரூ. 5000/-

அல்லது பரிசுத்த ஆவியானவர் உங்கள் உள்ளத்தில் வழிநடத்துகிறபடி நிதியுதவி அளிக்கலாம்.

டைனமிக் கிட்ஸ் கேம்ப்:இந்த ஆண்டு, 20,000 சிறுவர்கள் முகாமில் கலந்துகொண்டு, பல்வேறு செயல்பாடுகள் மூலம்  ஆசீர்வாதம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கர்த்தர் உங்களை வழிநடத்துகிறபடி நீங்கள் எத்தனை பிள்ளைகளுக்கு வேண்டுமானாலும் உதவிசெய்யலாம். பொருளுதவி அளிப்பதற்கு கிளிக்  செய்யவும்

ஜெப கோபுரங்களில் சிறப்புக் கூட்டங்கள்:

  • 16.05.2026 – சிந்த்வாராவில் உள்ள ஜபல்பூர் ஜெப கோபுரத்தால் நடத்தப்படும் நற்செய்திக் கூட்டம்.
  • 19.05.2026 – பௌரியில் உள்ள டேராடூன் ஜெப கோபுரத்தால் நடத்தப்படும் நற்செய்திக் கூட்டம்.
  • 21.05.2026 – Dr.  டி.ஜி.எஸ். தினகரன் ஜெப கோபுரத்தால் போரூரில் நடத்தப்படும் நற்செய்திக் கூட்டம்.

சகோதரர் சாமுவேல் தினகரன் அவர்களின் சிறப்புக் கூட்டங்கள்:

  • மே 16-ம் தேதி - மாலை 6 மணிக்கு டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி மைதானம், திருவண்ணாமலை.                                                  
  • மே 31-ம் தேதி - காலை 9 மணிக்கு - ஞாயிறு ஆசீர்வாத கூட்டம், ஜே.சி. ஹவுஸ்,  சென்னை -  600 001.

நீங்கள் இந்தப் பகுதிகளில் அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவராக இருந்தால், உங்களுக்கு அருகிலுள்ள ஜெப கோபுரத்துடன் தொடர்புகொண்டு, கலந்துகொள்ளுங்கள்.


காருண்யா பல்கலைக்கழகம்

மனுக்குலத்திற்கு சேவை செய்ய அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குதல்

  • ரோபாட்டிக்ஸ் துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக, காருண்யா பேராசிரியர்கள் IIT IHub-லிருந்து ரூ.32.88 லட்சம் ஆராய்ச்சி நிதியைப் பெற்றுள்ளனர்.
  • புதுமையான மற்றும் திறமையான உணவு பதப்படுத்தும் தீர்வுகளை உருவாக்குவதற்காக, MSME Idea  திட்டத்தின் கீழ் ரூ.15.00 லட்சம் மதிப்புள்ள ஒரு திட்டத்தை காருண்யா இன்குபேட்டி துறை பெற்றுள்ளது.
  • காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு கண்காட்சி 2026,  20-க்கும்  மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் மனிதவள அதிகாரிகளையும் 1,000-க்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்களையும் ஒன்றிணைத்து, நேர்காணல்கள், தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான ஒரு துடிப்பான தளத்தை உருவாக்கியது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, தங்கள் எதிர்கால வேலை/தொழிலை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்தனர்.
  • ஆட்டோடெஸ்க் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  India Design Week போட்டியில்,  பேரிடர்-நிவாரண மீட்பு வண்டியின் புதுமையான வடிவமைப்பிற்காக காருண்யா மாணவர்கள் முதல் பரிசையும் ரூ.50,000 ரொக்கப் பரிசையும் வென்றனர்.
  • மேம்பட்ட உயிர்மருத்துவ உணர்தல் மற்றும் அடுத்த தலைமுறை சுகாதார கண்காணிப்பு அமைப்புகளில் காருண்யா பேராசிரியர்களும் மாணவர்களும் இரண்டு புதிய காப்புரிமைகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

காருண்யா பல்கலைக்கழகத்தில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் அனைத்து இடங்களும் நிரம்பி வருகின்றன. பல கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு http://admissions.karunya.edu  .என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.


சீஷா
கருணையுள்ள  கவனிப்புடன் நம்பிக்கையை மீட்டெடுத்து, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்

  • மணிப்பூர், கலபஹாரில் உள்ள சீஷாவின் கற்றல் மையத்தில் சேர்ந்த, பெற்றோரை இழந்த 55 சிறுவர்கள்  சீஷாவின் புதிய ஆடைகளைப் பெற்றனர்.
  • கோயம்புத்தூரில் உள்ள உளவியல் சமூக மறுவாழ்வு மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் 107 பயனாளிகள் ஆலோசனைகளைப் பெற்றனர். மேலும், சென்னையில் உள்ள வானகரம் மறுவாழ்வு மையத்தில் சிறப்புத் தேவைகள் கொண்ட 15 சிறுவர்கள்  சிறப்புக் கல்வி மற்றும் பிசியோதெரபி சிகிச்சையைப் பெற்றனர்.
  • கடலூரில் சீஷா மூலம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் பாதிப்புள்ள 120 சிறுவர்கள்  ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெற்றனர். மேலும், கடலூர், தஞ்சாவூர் மற்றும் சென்னையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்கள் மூலம் 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
  • தேவனுடைய கிருபை, உங்கள் ஜெபங்கள் மற்றும் உங்கள் தியாகமான உதவி இல்லாமல், இது போன்ற ஊழியச் சேவைகள் ஒருபோதும் நடைபெறாது. பரலோகம் உங்கள் விசுவாசத்தைப் பதிவுசெய்து,  உங்களுக்கு வெளியரங்கமாய்ப் பலனளிக்கும் (2 கொரிந்தியர் 9:6)

மிக்க நன்றி, பங்காளரே!

இன்னும் மிகப் பெரிய பணிகள் நமக்கு முன்னால் உள்ளன, உங்கள் தொடர்ச்சியான உதவி நாங்கள் தொடர்ந்து முன்செல்ல செய்யும்! இந்த மாதம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் அறுவடையை  செய்வோம்.