பரலோகத்தின் நித்திய பலனுக்காக வாழ்தல்
எனது விலையேறப்பெற்ற நண்பரே, மெய்யான சமாதானமும் நீடித்த பாதுகாப்பும் காணப்படும் பரலோகத்தை நோக்கி நம் கண்களை ஏறெடுக்கும்படியாக கர்த்தர் அன்புடன் நம்மை அழைக்கிறார்.
"தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்." (2 கொரிந்தியர் 5:1)
ஆம், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நம் அனைவருக்கும், பரலோகத்தில் நமக்கென ஒரு நித்திய வீடு ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், கர்த்தர் நித்திய பலன்களை எவ்விதமான மக்களுக்காக ஆயத்தப்படுத்துகிறார்? எவ்வகையான வாழ்க்கை தேவனுடைய இருதயத்தை மகிழ்விக்கிறது?
மத்தேயு சுவிசேஷம் 10:41-42 வசனங்களில் இயேசு இதைப் பற்றிப் பேசுகிறார். இப்போது பரலோகத்தின் இந்த மூன்று பலன்களையும், அவற்றை பெறும் வாழ்க்கை முறைகளையும் தியானிப்போமாக.
1. உண்மையுள்ள சீஷர்களுக்கு: ஒரு சீஷன் என்பவன் இயேசுவை முழு உள்ளத்தோடு பின்பற்றி, தேவனுடைய வார்த்தை தன் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் வடிவமைக்க அனுமதிக்கிறவன். கவனத்தைச் சிதறடிக்கிற உலகப்பிரகாரமான காரியங்களை விட்டுவிட்டு ஜெபத்தையும், சமரசத்தை விட பரிசுத்தத்தையும், வசதி வாய்ப்புகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலையும் நாம் தெரிந்துகொள்ளும்போது கர்த்தர் நம்மீது களிகூருகிறார். நாளுக்கு நாள் அவரோடுகூட உண்மையுடன் தொடர்ந்து நடப்பவர்களை அவர் கனப்படுத்துகிறார்.
இருண்ட தருணங்களில்கூட, மகதலேனா மரியாள் இயேசுவுக்கு அருகிலே இருந்தாள். அவளுடைய நன்றியுணர்வு, பக்தியினிமித்தம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ட முதல் சாட்சியாக அவள் மாறினாள். (யோவான் 8:31; லூக்கா 8:2 ; யோவான் 19:25)
2. நீதியான வாழ்க்கைக்காக: நீதி என்பது மன்னிப்பு, தாழ்மை, தயவு மற்றும் பரிசுத்தம் ஆகியவற்றின் மூலம் அன்றாட வாழ்வில் கிறிஸ்துவின் சுபாவத்தை பிரதிபலிப்பதாகும். நாம் நீதியுடன் தேவனிடம் முழுமையாக நம்மை அர்ப்பணிக்கும்போது, மற்றவர்களைப் பலப்படுத்தவும் வழிநடத்தவும் கர்த்தர் நமக்கு ஆவிக்குரிய அதிகாரத்தைத் தருகிறார். (தானியேல் 12:3)
3. அவருடைய தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரர்களுக்கு: தீர்க்கதரிசன ஊழியம் தேவனுடைய இரக்கத்தை வெளிப்படுத்துகிறது, உடைந்த வாழ்க்கையைச் சீரமைக்கிறது, மேலும் கர்த்தர் அவர்களை மறக்கவில்லை என்பதை மக்களுக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால் அது தனி நபர்களோடு மட்டும் நின்று விடுவதில்லை; பட்டணங்கள், தேசங்கள் மற்றும் தலைவர்களுக்காகவும் தேவன் தமது பாரத்தைச் சுமக்க தீர்க்கதரிசனக் குரல்களை எழுப்புகிறார். (ஆமோஸ் 3:7; வெளி்ப்படுத்தல். 10:11; 1 கொரிந்தியர் 14:1, 3; எரேமியா 1:10; யோவான் 16:33)
தேவனுடைய தீர்க்கதரிசன கிருபையானது மேய்ப்பர்கள், போதகர்கள் மற்றும் சுவிசேஷகர்கள் மீது மட்டுமல்ல, ஆசிரியர்கள் மற்றும் கல்வித் தலைவர்கள், ஊடக வல்லுநர்கள், சட்டம் மற்றும் சட்டப்பூர்வ வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள், ஏழைகளுக்கு சேவை செய்து நீதிக்காக நிற்பவர்கள்மீதும் தங்கியிருக்கும் என்பதையும், இந்தக் கடைசி நாட்களில் அவருடைய மகிமைக்காக வல்லமையான காரியங்களை நடப்பிப்பதற்காக சிறுவர்கள்கூட தேவனுடைய ஆவியால் நிரப்பப்படுவார்கள் என்பதையும் அவர் எனக்குக் குறிப்பாகக் காண்பித்திருக்கிறார்.
நாம் இயேசுவைப் பின்பற்றி, அவருடைய அன்பைப் பிரதிபலித்து, அவருடைய தீர்க்கதரிசன அபிஷேகத்தை நாடி, மற்றவர்களை அவரிடம் நெருங்கி நடக்கும்படி நாம் அவர்களை வழிநடத்தும்போது, கர்த்தர் நமது உண்மைத்தன்மைக்கு பூமி மற்றும் நித்தியம் ஆகிய இரண்டிலும் பலன் அளிப்பார்.
“என் அன்பின் பரலோகத் தந்தையே, உம்முடைய பிள்ளைகள் உம்மோடுகூட உண்மையுடன் நடக்கவும், நீர் தரும் நித்திய பலன்களுக்கு பாத்திரவான்களாக வாழும்படியாக அவர்களை ஆசீர்வதியும். மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி அவர்களை நீதியாலும் உமது பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் நிரப்பும். உமது பரலோக சமாதானமும், தயவும், தீர்க்கதரிசன கிருபையும் அவர்கள் வாழ்வில் எப்போதும் தங்கியிருக்கட்டும். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
தலைமைச் செயல்பாட்டு அதிகாரியின் மேசையிலிருந்து:
மே மாதத்தில் உங்களால் ஏற்பட்ட நல்தாக்கம்
கடந்த மாதம், தினகரன் குடும்பத்தினர் பல்வேறு பிரார்த்தனை கூட்டங்கள் மற்றும் வெளி ஊழியங்களில் ஈடுபட்டனர். அதன் மூலம் இருதயங்கள் தொடப்பட்டன, குடும்பங்கள் ஆறுதல் அடைந்தன. பரிசுத்த ஆவியானவர் மாபெரும் ஒரு நதியைப் போலப் பாய்ந்து சென்றார். அநேகருடைய வாழ்க்கை மறுரூபமடைந்தன. உங்களுடைய அன்பான ஜெபங்கள் மற்றும் தாராளமான ஆதரவிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். கடந்த மாதம் மட்டும், 3 கோடியே 52 லட்சம் ஜெப விண்ணப்பங்களுக்கு நாங்கள் ஊழியம் செய்ததன் மூலம், அநேகரின் வாழ்வில் தேவனுடைய சமாதானத்தையும் ஆசீர்வாதங்களையும் எங்களால் கொண்டு வர முடிந்தது.
- ஜெபகோபுர ஊழியம் மூலம், 1.3 லட்சம் மக்கள் நேரடியாக ஜெபம் மற்றும் ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டனர்.
- தொலைபேசி ஜெபகோபுரம், 3.9 லட்சம் விலையேறப்பெற்ற மக்களுக்கு அவர்களுடைய தேவை நேரங்களில் ஊழியம் செய்தது.
- கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் 59,100 மக்கள் தொடப்பட்டனர்.
- பதிவு செய்யப்பட்ட குரல் பிரார்த்தனை (Dia a Prayer) ஜெப அழைப்புகள் மூலம் 13,500 மக்கள் பெலத்தையும் நம்பிக்கையையும் பெற்றனர்.
- இயேசு அழைக்கிறார் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் 22 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு ஊழியம் செய்யப்பட்டுள்ளது.
- சமூக ஊடகத் தளங்கள் 3.24 கோடி பார்வையாளர்களைச் சென்றடைந்து, கிறிஸ்துவின் நம்பிக்கை மற்றும் அன்பினால் மக்களின் வாழ்விலும் குடும்பங்களிலும் நல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
- டைனமிக் கிட்ஸ் கேம்ப் மூலம் 20,000 சிறுவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
காருண்யா பல்கலைக்கழகம்
(கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கல்வி மூலம் வாழ்க்கையை மறுரூபமாக்குதல்)
2026-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரிகளில் 90% மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மெக்கானிக் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவர், Vasco Maritime நிறுவனத்தில் ஆண்டுக்கு 19.56 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்.
- காக்னிசண்ட் நிறுவனம் நடத்திய மதிப்புமிக்க “Technoverse Hackathon 2026” – ல் “மருந்து மறுபயன்பாடு” குறித்த தங்களது கண்டுபிடிப்பிற்காக காருண்யா மாணவர் குழு இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும் வென்றது.
- உயிர்காக்கும் பயன்பாடுகளுக்கான கையடக்க, குறைந்த விலை CPAP கருவி மற்றும் குழந்தைகளைக் கண்காணிப்பதற்கான ஒரு ஸ்மார்ட் தொட்டில் சாதனம் ஆகியவற்றை உருவாக்கியதற்காக காருண்யா பேராசிரியர் குழுவிற்கு இரண்டு காப்புரிமைகள் வழங்கப்பட்டன.
- ஒன்பது காருண்யா மாணவர்கள், ஸ்பெயினில் உள்ள Alicante பல்கலைக்கழகம், கனடாவில் உள்ள Cape Breton பல்கலைக்கழகம், லிதுவேனியாவில் உள்ள Vilnius பல்கலைக்கழகம், தென் கொரியாவில் உள்ள Woosong பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தங்களது வெளிநாட்டுப் பருவத் திட்டத்தைத் தொடர்கின்றனர். அங்கு அவர்கள் தானியக்கம் மற்றும் ரோபோட்டிக்ஸ் குறித்த மேம்பட்ட படிப்புகளை மேற்கொள்வதுடன், பேராசிரியர்களுடன் இணைந்து கூட்டுத் திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
- காருண்யா பல்கலைக்கழகத்தின் 2026-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் முடிவடைகிறது. மேலும் விவரங்களுக்கு www.karunya.edu என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
சீஷா
(மகிழ்ச்சியைப் பரப்புதல் மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குதல்)
- ஏழை இளைஞர்களுக்கு சந்தை நிலைக்கேற்ற திறன்களை வழங்குவதற்காக, செயற்கை நுண்ணறிவு(AI), வாழ்க்கைத்திறன்கள், மென்திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விரிவான திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் சென்னை, வானகரத்தில் தொடங்கப்பட்டது.
- சீஷாவின் வட இந்திய நலத் திட்டப் பகுதிகளில் உள்ள நலிவடைந்த சமூகங்களைச் சேர்ந்த 755-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆடைகள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
- நல்வாழ்வு மையம் 107 நோயாளிகளுக்கு ஆலோசனை ஆதரவை வழங்கியதுடன், ராஞ்சியில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக முடித்த 68 பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கியது.
ஜூன் மாத ஊழியம்
ஹைதராபாத் ஜெப கோபுரத்தைக் கட்டுவோமாக: ஜெபம் மற்றும் ஆலோசனைக்காக வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாங்கள் ஹைதராபாத்தில் ஒரு பெரிய, புதிய ஜெப கோபுரத்தைக் கட்டி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் மனமுடைந்த மற்றும் துன்பப்படும் 1.2 லட்சம் மக்களை இந்த ஜெப கோபுரத்தின் மூலம் ஆசீர்வதிப்பதே எங்கள் வாஞ்சை. இந்த ஜூலை மாதம் இதைத் தொடங்க இலக்கு வைத்துள்ளோம். இந்த ஜெப கோபுரத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பிரிவுகளான பிரார்த்தனை அரங்குகள், தேவாலயம், ஆலோசனை மற்றும் ஜெப அறைகள், மற்றும் தொலைபேசி ஜெப கோபுரத்திற்கான வசதிகளைக் கட்டி முடிக்க 5 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
வேதனையில் வாழும் எண்ணற்ற மக்களுக்கு நம்பிக்கையின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டும் இந்த உன்னதப் பணியில், பொருளாதாரரீதியாக உதவி செய்பவராகவோ அல்லது இணை நிதியுதவியாளராகவோ முன்வந்து எங்களுடன் இணையுங்கள். உங்கள் பெயர்கள் குறிப்பிட்ட அறைகளிலும், தியான மண்டபத்திலும் காட்சிப்படுத்தப்படும். https://bit.ly/HYDPTBF என்ற இந்த இணைப்பின் மூலம் நீங்கள் நன்கொடை அளிக்கலாம்.
ஜெப கோபுரங்களில் சிறப்புக் கூட்டங்கள்:
- 07.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) – வானகரம், ஜே.சி. கார்டன், கில்கால் ஹாலில் சிறப்பு ஞாயிறு ஆசீர்வாதக் கூட்டம்.
ஜெப கோபுரங்களிலிருந்து நடைபெறும் வெளிஊழியக் கூட்டங்கள்:
- ஜூன் 6, 7 – அனைத்து ஜெப கோபுரங்களிலும் ‘எழுந்து கட்டுவோம்’ ஆசீர்வாதக் கூட்டங்கள்.
- ஜூன் 6 – கேஸ்டோபூர், கொல்கத்தா ஜெப கோபுரத்தால் நடத்தப்படும் வெளி ஊழியக் கூட்டம்.
- ஜூன் 13 – நெடுமாங்காடு, திருவனந்தபுரம் ஜெப கோபுரத்தால் நடத்தப்படும் வெளிஊழியக் கூட்டம்.
- ஜூன் 20 – பாலமனேர், சித்தூர் ஜெப கோபுரத்தால் நடத்தப்படும் வெளிஊழியக் கூட்டம்.
- ஜூன் 27 – சென்னை, ரெட்ஹில்ஸ், அண்ணா நகர் ஜெப கோபுரத்தால் நடத்தப்படும் வெளிஊழியக் கூட்டம்.
நீங்கள் இந்தப் பகுதிகளில் அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவராக இருந்தால், தயவுசெய்து அருகிலுள்ள ஜெப கோபுரத்துடன் தொடர்புகொண்டு இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள்.
இரட்சகர் இயேசு தேவை என்ற நிலையில் உள்ள மக்களுக்கு உதவ, இந்த ஊழியத்திற்காக ஜெபியுங்கள் மற்றும் ஆதரவளியுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுவிசேஷத்தை பூமியின் கடைசிபரியந்தமும் பரவச் செய்து, மக்களின் வாழ்வில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவோம். மேலும் விபரங்களுக்கு www.jesuscalls.org என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலமாக கர்த்தர் எவ்வாறு உங்களை ஆசீர்வதித்தார் என்ற சாட்சியை பின்வரும் லிங்க்கை கிளிக் செய்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்: https://www.jesuscalls.org/testimony

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


